கல்லூரிக்கு
புத்தகங்களும்,
மதிய உணவும்,
தண்ணீர்
குப்பியும்
எடுத்து
வருகிறாய்....
என்றாவது ஒருநாள்
எதோ
ஒரு
புத்தகத்தை
மறக்கிறாய்..
மற்றொரு நாள்
தோழியின்
மதிய
உணவை
பகிர்ந்துகொள்கிறாய்..
தண்ணீர்
குப்பி
என்றைக்கேனும்
உடைந்து
போகலாம்..
ஆனால்....
என்றைக்கும்
மறக்காமல்
சுமந்து
வருகிறாய்
எனக்கே
எனக்கான
உன் காதலையும்
புன்சிரிப்பையும்....
No comments:
Post a Comment