கார்கால மேகம்
பெய்யென பெய்யும் மழை
Saturday, 1 March 2014
Sunday, 23 February 2014
Thursday, 2 May 2013
போய்விடு
என் இறுதி ஊர்வலத்தில்
நிச்சயமாய் கலந்துகொள்ளாதே
சிதறி கிடக்கும்
ரோஜா இதழ்கள் கூட
உன்னை நெருஞ்சி முள்ளாய்
தைத்துவிடும்.
Wednesday, 1 May 2013
Tuesday, 29 January 2013
Monday, 21 January 2013
Saturday, 21 July 2012
மரணத்தின் வாசனை
மரணத்தின் வாசனை
கொடுமையானது
ஊதுபத்தி, பன்னீர்
ரோஜா மாலை
எல்லாவற்றையும் மீறி
ஒரு அழுத்தனமான வாசனை
இறந்தவரின் மீதிருந்தா
அழுபவர்களின் மீதிருந்தா
பாசமா? பாசாங்கா?
கண்ணீரின் உப்பும்
வலியும் வருத்தமும்
சில குரூர மகிழ்ச்சியும்
வஞ்சனையும்
கலந்து வீசும்
எது அதிகம்
பிரித்தறிய முடியவில்லை
இறந்தவரின் ஆன்மா
எங்கோ ஒரு ஓரத்தில் நின்று
இந்த வாசனையை
நுகர்ந்திருக்கலாம்..
அதன் சதவிகிதத்தை
கண்டறிந்திருக்கலாம்
சொல்வதற்கில்லை..
Thursday, 19 July 2012
நானும் ஒரு உயிர்
உரிமைகளை கேட்டால் பெண்ணியவாதி
ஆலோசனை கூறினால் திமிர் பிடித்தவள்..
தன்னம்பிக்கையோடு உலவுகையில் ஆணவம் கொண்டவள்
எனக்கான சுதந்திரம்
நஞ்சுக் கொடியோடு
அறுத்து எறியப்படுகிறது.
நான்
என் சுக துக்கங்களை விட்டுக்கொடுக்கவேண்டும்
உங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகவேண்டும்
உங்களுக்கு மகிழ்ச்சி தரவேண்டும்
உங்களை காதலிக்கவேண்டும்
உங்கள் காதலை பெற பிரயத்தனப்படவேண்டும்
மீறினால்
என் பெண்மையும்
கற்பும் சந்தேகத்திற்குள்ளாகும்
காலங்காலமாக பல நூறு
அக்னி பரிட்சைகள்
ராமனைக்காட்டிலும்
எவ்வளவோ உயர்ந்தவன் ராவணன்
எப்போது அறியப்படுவேன்
நானும் ஒரு மனித உயிர் என்று?
Saturday, 11 June 2011
நச்சென்று ஒரு ஹச்
மிளகாய் நெடி தாங்காமல்
உன் சிறிய மூக்கை
கொஞ்சம் சுருக்கி
கண்களை சொருகி
செவ்விதழ் சிறிது திறந்து
ஹச் அல்ல
செம நச்சென்று தும்முகிறாய்
என் அடுத்த கவிதைக்கு
கரு தந்தமைக்கு
இச்சொன்று தருகிறேன்
மிளகாய்க்கு
Subscribe to:
Posts (Atom)



