Thursday, 19 July 2012

நானும் ஒரு உயிர்


உரிமைகளை கேட்டால் பெண்ணியவாதி
ஆலோசனை கூறினால் திமிர் பிடித்தவள்..
தன்னம்பிக்கையோடு உலவுகையில் ஆணவம் கொண்டவள்
எனக்கான சுதந்திரம்
நஞ்சுக் கொடியோடு
அறுத்து எறியப்படுகிறது.
நான்
என் சுக துக்கங்களை விட்டுக்கொடுக்கவேண்டும்
உங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகவேண்டும்
உங்களுக்கு மகிழ்ச்சி தரவேண்டும்
உங்களை காதலிக்கவேண்டும்
உங்கள் காதலை பெற பிரயத்தனப்படவேண்டும்
மீறினால் 
என் பெண்மையும்
கற்பும் சந்தேகத்திற்குள்ளாகும்
காலங்காலமாக பல நூறு
அக்னி பரிட்சைகள்
ராமனைக்காட்டிலும்
எவ்வளவோ உயர்ந்தவன் ராவணன்
எப்போது அறியப்படுவேன்
நானும் ஒரு மனித உயிர் என்று?

No comments:

Post a Comment